அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வனம் அழிவு

0 591
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக அங்கு வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக அங்கு வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தற்போது 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை இருந்தாலும் இது மேலும் உயரக்கூடும் என்பதால் 42 மில்லியன் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

காட்டுத் தீ காரணமாக சான் பிரான்சிஸ்கோவின், சோனோமா கவுண்டி மற்றும் நாபா கவுண்டியில் குடியிருப்பவர்கள் வீடுகளை உடனே காலி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத் தீயால் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வனம் அழிந்துள்ளது.

இதன் காரணமாக மாகாண ஆளுநர் கவின் நியூசோம் செவ்வாயன்று அவசரகால நிலையை அறிவித்த சில மணி நேரங்களிலேயே அங்கு மேலும் 30 இடங்களில் நெருப்பு பற்றி எரிந்து வருகிறது.

கலிபோர்னியா மாகாணத்தின் 3 மிகப்பெரிய மின்சார வழங்கு நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் 4 லட்சம் வீடுகளுக்கும், நேற்று 2 லட்சம் வீடுகளுக்கும் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆங்காங்கே பற்றி எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் ஆயிரத்து 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமானம் மூலமும் ரசாயனப் பொடி தூவப்பட்டு நெருப்பை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments