ஓய்வை அறிவித்த தோனிக்கு ஃபேர்வெல் போட்டியை நடத்த பிசிசிஐ ஆர்வம்

0 6679

ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு பேர்வெல் போட்டியை நடத்த, இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்த தோனி, கடந்த 15ம் தேதியன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைதொடர்ந்து, அவருக்கு முறைப்படி ஃபேர்வெல் போட்டியை நடத்தி வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், இந்திய அணிக்காக பாடுபட்ட தோனி அனைத்து மரியாதைக்கும் உரியவர் என்றார். மேலும், தற்போது சர்வதேச போட்டிகள் ஏதும் இல்லாத நிலையில், ஐபிஎல் தொடருக்கு பிறகு என்ன செய்ய முடியும் என்பதை ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments