ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி டாலராக உயர்வு

0 706
iPhone, iPad, Mac Book உள்ளிட்ட தயாரிப்புகள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.

iPhone, iPad, Mac Book உள்ளிட்ட தயாரிப்புகள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.

இதன் மூலம் 2 லட்சம் கோடி டாலர் என்ற சந்தை மதிப்பை கடந்துள்ள முதல் அமெரிக்க நிறுவனம் என்ற பெயரை ஆப்பிள் பெற்றுள்ளது.

பல்வேறு செயலிகள் மூலம் அந்நிறுவனம் வழங்கும் சந்தா சேவைகள் மற்றும் 5G தொழில்நுட்பத்துடன் வர இருக்கும் iPhone 12 கைபேசி போன்றவை முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், 470 டாலர் வரை விற்கப்படும் ஆப்பிள் நிறுவனப் பங்குகளை வாங்கி குவித்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றால், உலகம் முழுதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள போதும், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஆண்டை விட 60 சதவீதம் உயர்ந்து, 2 லட்சம் கோடி டாலரை கடந்துள்ளது.

ஆப்பிளை தொடர்ந்து, Amazon மற்றும் Microsoft நிறுவனங்களும் விரைவில் 2 Trillion சந்தை மதிப்பை எட்டும் என எதிபார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments