பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள சான்றிதழ்களை ஆக.20 இரவுக்குள் பதிவேற்றம் செய்ய கெடு

0 1241
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான சான்றிதழ்களை வியாழன் இரவுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவுறுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான சான்றிதழ்களை வியாழன் இரவுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவுறுத்தி உள்ளது.

செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் மட்டுமே தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கும் பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்கள், வியாழக்கிழமை இரவுக்குள் அவற்றை பதிவேற்றம் செய்யுமாறு  வலியுறுத்தி உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் வெளியிடப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments