தமிழகத்தில் இன்று மேலும் 5795 பேருக்கு கொரோனா உறுதி : 116 பேர் பலி

0 3398
தமிழகத்தில் ஒரே நாளில் 5795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 10 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 116 பேர் நோய் தொற்றுக்கு பலியானதால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 123 - ஐ எட்டியுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.  வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 384  பேர் குணமடைந்திருப்பதால், இதுவரை "டிஸ்சார்ஜ்" செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 186 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் புதிதாக 394 பேரும், திருவள்ளூரில் மேலும் 393 பேரும், செங்கல்பட்டில் 315 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

சேலத்தில் 295 பேரும்,  தேனியில் புதிதாக 288 பேரும், காஞ்சிபுரத்தில் 257 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments