பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தில் இந்தி குறித்து எதுவும் கேட்கவில்லை - கோவை மாநகராட்சி ஆணையர்

0 1304
இந்தி மொழி கற்க விருப்பமா என கேட்கப்பட்டுள்ளதாக கூறி வெளியான கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி கற்க விருப்பமா என கேட்கப்பட்டுள்ளதாக கூறி வெளியான கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை கடைபிடிக்கப்படும் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் 3 - வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் கேட்கட்பட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத், இதுபோல இந்தி மொழி படிக்க விருப்பமா ? என விண்ணப்ப படிவத்தில் எந்தவொரு கேள்வியும் இடம்பெற வில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தற்போது, கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, 2020 - 21 ஆம் கல்வி ஆண்டுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் விண்ணப்ப படிவங்களை ஷர்வன் குமார் ஜடாவத், செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

கோவை மாநகராட்சிக்கு கெட்ட
பெயரை உருவாக்கும் வகையில் செயல்பட்டவர்கள் யார்? என கண்டுபிடித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments