பகலில் கல்லூரி பணி... இரவில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு! டாக்டர் கைதின் பின்னணி என்ன?

0 28669

மருத்துவக் கல்லூரியில் பணி புரிந்த கொண்டே பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த  டாக்டரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. 

பெங்களூருவிலுள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் கண்மருத்துவ பிரிவில் பணியாற்றி வருபவர் அப்தூர் ரகுமான். இவர் ஐ.எஸ். இயக்கத்தின் கிளை அமைப்பாக கருதப்படும் Islamic State Khorasan Province (ISKP) என்ற அமைப்புடன் தொடர்பு வைத்திருந்துள்ளார். பகலில் கல்லூரி பணியும் இரவில் ஐ.எஸ் இயக்கத்துக்காகவும் வேலை பார்த்துள்ளார். 

மேலும், ஐ.எஸ் அமைப்புக்காக சண்டையில் காயமடையும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் விதத்தில் ஒரு ஆப் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான ஆப் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுட்டிருந்தார். இந்தியாவில் ISKP அமைப்பின் செயல்பாடுகளுக்கும் இவர்தான் முக்கிய மூளை .

இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் பசவனகுடியில் உள்ள அவரின் விட்டில்  நேற்று அப்தூர்  ரகுமானை கைது செய்தனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. 

கடந்த 2014-ம் ஆண்டு அப்தூர் ரகுமான் சிரியாவுக்கு சென்றுள்ளார். அப்போது, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் மருத்துவ முகாமுக்கும் சென்று 10 நாள்களாக அங்கேயே தங்கியிருந்து காயமடைந்த தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதற்கு பிறகுதான், தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் ஆப் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

அப்தூர்  ரகுமான் கைதை தொடர்ந்த , அவருக்கு சொந்தமான 3 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி லேப் டாப் , செல்போன் உள்ளிட்ட பொருள்களை கைப்பற்றினர்.

கடந்த மார்ச் மாதத்தில் ஐ.எஸ்.கே.பி அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சமி வானி அவரின் மனைவி ஹினா பஷீர் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட சமி வானியுடன் அப்தூர்  ரகுமான் தொடர்பிலிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதுபோல் , திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி அப்துல்லா பஷீத்துடனும்  அப்தூர்  ரகுமான் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தோடர்பாக எம்.எஸ். ராமையா மருத்துவமனை கல்லூரி சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், ''கடந்த 2014- ம் ஆண்டு பெங்களூரு மருத்துவக் கல்லூரியில் அப்தூர்  ரகுமான் எம்.பி.பி.ஸ் படித்தார். தொடர்ந்து அரசு கோட்டாவில் எங்கள் கல்லூரியில் எம்.எஸ் படித்தார். ஜூலை 20- ந் தேதி எம்.எஸ். படிப்பையும் முடிந்தார். கல்லூரி வளாகத்துக்கு வெளியே அவருக்குள்ள தொடர்புகள் குறித்து எங்களுக்கு தெரியாது'' என்று கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments