கொரோனா தடுப்பூசியை, பணக்கார நாடுகள் பதுக்கக் கூடாது-போப் பிரான்சிஸ்

0 1146

பணக்கார நாடுகள், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பதுக்கி வைக்கக் கூடாது என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாடிகன் தேவாலயத்தில் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில், கொரோனா தடுப்பூசி போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலோ அல்லது அந்தத் தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச்சொத்தாக மாறினாலோ, இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி, உலக மக்கள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments