சென்னை வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வாங்குகிறாரா? வாட்ஸ் ஆப்-பில் பரவும் வீடியோ

0 6441

சென்னை வடபழனி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணன் என்பவர் மாமூல் பணம் வசூல் செய்வதாக வெளியாகி உள்ள வீடியோ குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடபழனியில் உள்ள ஜெயின் திருமண மண்டபத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு, அவரிடம் கவரில் பணம் வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஆய்வாளர் கண்ணன் செல்வது போல் வீடியோ வெளியாகியுள்ளது. வடபழனி பகுதியில் சூதாட்ட கிளப், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வாளர் கண்ணன் மாமூல் வசூலிப்பதாகவும் அது தொடர்பான வீடியோ தான் இது காவலர்கள் இருக்கும் வாட்ஸ் குழுவில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

ஆனால் இது ஊரடங்கிற்கு முன்பு உள்ள பழைய வீடியோ எனவும், தனிப்பட்ட முறையிலான கொடுக்கல் வாங்கலை சித்தரித்து தன்னை பழிவாங்கும் நோக்கில் காவல் துறையில் உள்ள சிலர் செயல்படுவதாக காவல் ஆய்வாளர் கண்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடைப்பெற்று வருவதாகவும், மாமூல் வாங்கியது உண்மை என நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments