சீ த்ரூ எனப்படும் கண்ணாடி கழிவறைகளை கட்டி வைத்துள்ள ஜப்பான்

0 4323

எதிலும் புதுமையை விரும்பும் ஜப்பானியர்கள், சீ த்ரூ எனப்படும் கண்ணாடியால் ஆன பொதுக் கழிவறைகளை கட்டி அதிர வைத்துள்ளனர்.

ஜப்பானின் பரபரப்பான நகரான ஷிபுயாவில் (Shibuya) உள்ள Yoyogi Fukamachi Mini Park மற்றும் Haru-no-Ogawa Community Parkல் தலா 2 ஜோடி கண்ணாடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

கழிவறைகளை குறித்த மக்களின் மனோபாவம் மாற வேண்டும் என்ற நோக்கத்துடனும், கழிவறை பயன்பாட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த கண்ணாடி கழிவறைகளை வடிவமைத்ததாக அதை உருவாக்கிய Shigeru Ban Architects என்ற கட்டிடக்கலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்லாம் சரி, கண்ணாடி கழிவறைக்கு சென்றால் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க, உள்ளே ஆள் சென்றால் உடனே சீ த்ரூ கண்ணாடி ஒளிபுகா தன்மையை அடைந்து விடும் டெக்னிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments