காவலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்

0 774
காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் சுப்பிரமணியன் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பணியில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பணியில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழகக் காவல்துறை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments