ஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து, இந்த வழக்கில் தங்கள் தரப்பை கேட்காமல், உச்ச நீதிமன்றம் ,இடைக்கால தடை உள்ளிட்ட எந்த நிவாரணத்தையும் வழங்க கூடாது என்பதற்காக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Comments