முதலமைச்சரின் மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

0 720
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நட்ட ஈட்டு வழக்கை நிராகரிக்கக் கோரிப் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நட்ட ஈடு வழக்கை நிராகரிக்கக் கோரிப் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில், தன்னைத் தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்டதற்காகத் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நட்ட ஈடு கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடுத்தார். 

தன் மீதான மான நட்ட ஈடு வழக்கை நிராகரிக்கக் கோரி மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, மான நட்ட ஈடு வழக்கை நிராகரிக்க எந்தக் காரணமும் இல்லை எனக் கூறி, மேத்யூ சாமுவேலின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

முதலமைச்சரின் மனுவுக்குப் பதிலளிக்க மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments