கர்நாடகத்தில் இருந்து காவிரியில் 44,428 கன அடி நீர் திறப்பு

0 13330
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குக் காவிரியில் 44 ஆயிரத்து 428 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குக் காவிரியில் 44 ஆயிரத்து 428 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் ஏற்கெனவே நிரம்பியுள்ளன.

இதனால் மழைப் பொழிவு, நீர்வரத்தைப் பொறுத்துக் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 31ஆயிரம் கன அடியாக இருந்தது.

அணையில் இருந்து 42 ஆயிரத்து 928 கன அடி நீர் காவிரியாற்றில் திறந்துவிடப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து ஐயாயிரத்து 480 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் ஆயிரத்து ஐந்நூறு கன அடியாகவும் இருந்தது.

இரு அணைகளில் இருந்தும் காவிரியில் மொத்தமாக 44,428 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments