பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்..!

0 1601

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்தக் கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களில் ஒன்றான மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அமைச்சர்களுடன் காணொலி காட்சியின் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
மேலும், நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அமைச்சரவை ஆய்வு செய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து, அரசின் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் மத்திய அமைச்சரவை அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

திருச்சி உட்பட மேலும் 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் பரிந்துரைகள், டெல்லியில் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆண்டுக்கு, 10 முதல் 15 லட்சம் பயணியர் வந்து செல்லும் விமான நிலையங்களின் பராமரிப்பை தனியார்மயமாக்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் இரண்டாம் கட்டமாக திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவவேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர், ஆகிய விமான நிலையங்களையும், தனியார் மயமாக்க அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்க உள்ளதாக, விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments