தோனியை கேப்டனாக பரிந்துரைத்தது ஏன்? - சச்சின் விளக்கம்

0 8835

மகேந்திர சிங் தோனியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பரிந்துரைத்தது தொடர்பாக, முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், தோனியுடன் விளையாடும்போது ஸ்லிப்பில் பீல்ட் செய்யும் சமயங்களில் போட்டி தொடர்பாக கலந்துரையாடுவேன் எனவும், அந்த சமயங்களில் ஆட்டத்தின் போக்கை கணிப்பது, பீல்ட் செட்டிங் ஆகியவை தொடர்பாக தோனியின் கருத்தை கேட்டறிந்ததில், அவர் கிரிக்கெட் தொடர்பாக நல்ல அறிவை பெற்றிருந்ததை உணர்ந்ததாகவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

அதைதொடர்ந்தே, இந்திய அணியின் புதிய கேப்டனாக தோனியை நியமிக்கலாம் என பிசிசிஐயிடம் பரிந்துரைத்ததாக சச்சின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments