சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சுங்கத்துறை தலைமை ஆணையர் கைது.. ரூ.1 கோடி பறிமுதல்..!

0 778

சென்னையில் சுங்கத்துறை தலைமை ஆணையரை லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சவுரவ் சர்மா முன்னதாக டெல்லியில் உள்நாட்டு கண்டெய்னர் கிடங்கில் மதிப்பீட்டாளராக பணியற்றியபோது, இறக்குமதி பொருட்களுக்கு தொடர்ந்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நிலுவையில் உள்ள பல்வேறு பணிகளை முடித்து தர பல தரப்பினரும், இடைத்தரகர் மூலம் சவுரவ் சர்மாவை அணுகி லஞ்சம் வழங்குவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, சவுரவ் சர்மா சார்பில் இடைத்தரகரிடமிருந்து ரூபாய் 7 லட்சத்தை பெற்ற சுங்க முகவர் உள்ளிட்ட மூவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அதன் நீட்சியாக சவுரவ் சர்மாவின் வீட்டில் சோதனை செய்து அவரை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments