பணியில் சேர்ந்து 3 ஆண்டுகளில் சோகம்... வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலரின் சோக பின்னணி!

0 17154
கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணி, மற்றும் ரவுடி துரைமுத்து

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு நாடு அருகே மணக்கரை பகுதியில் இரட்டைக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க சென்ற போது , ரவுடி கும்பல் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதில் ரவுடி துரைமுத்து என்பவர் வீசிய நாட்டுவெடிகுண்டு, காவலர் சுப்ரமணியன் மீது விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சில காவலர்கள் காயமடைந்தனர். காவலர் சுப்பிரமணி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய துரைமுத்துவை போலீஸார் என்கவுன்டர் செய்ததாக சொல்லப்படுகிறது. காவலர் சுப்ரமணியம் ரவுடி துரைமுத்துவின் சடலங்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

 வெடிகுண்டு வீசியதில் கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியம் ஏரல் தாலுகாவுக்குட்பட்ட பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2017-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். ஆழ்வார் திருநகரி காவல்நிலையத்தில் பணியை தொடங்கிய அவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தனிப்படை பிரிவு காவலராக மாற்றப்பட்டார்.

சுப்ரமணியம்  மீது வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து மீது பல வழக்குகள் உள்ளன. ஏரலில் இரண்டு ஆண்டுகளுக் முன்பு நடந்த இரட்டைக் கொலையிலும் ரவுடி துரைமுத்துவுக்கு தொடர்பு இருந்துள்ளது. இந்த வழக்கில்தான் ரவுடி துரைமுத்துவை கைது செய்ய போலீஸார் தேடி வந்தனர். வல்லநாடு மலைப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு போலீஸார் சென்ற போதுதான் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. 

சுப்பரமணியம் கொல்லப்பபட்டதால், அவரின் சொந்த ஊரான பாண்டாரவிளை கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments