ஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பெண்கள் உயிரிழப்பு

0 1056

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி மற்றும் 9 பெண்கள் உயிரிழந்தனர்.

கராச்சியில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தட்டா மாவட்டத்தின் கீஞ்சர் ஏரியின் நடுவில் உள்ள கோயிலுக்கு சென்று திரும்பியபோது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிக சுமை மற்றும் பலத்த காற்று காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களையும் மயக்க நிலையில் 3 பேரையும் மீட்புப்படையினர் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments