ஸ்டெர்லைட்: திறக்கப்படுமா? மூடப்பட்டிருக்குமா? சற்று நேரத்தில் தீர்ப்பு

0 1782

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு

மே 28, 2018-ல் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது

தமிழக அரசு உத்தரவை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு

டிச.15, 2018: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது

பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

விசாரணை முடிவடைந்து கடந்த ஜனவரியில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் இன்று தீர்ப்பு வழங்குகிறது

ஸ்டெர்லைட் மூடப்பட்டது ஏன்?

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மாசுபாடு எனக்கூறி மூடி சீல் வைத்தது தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

தூத்துக்குடியில் சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஸ்டெர்லைட் ஏற்படுத்தியுள்ளது - தமிழக அரசு

எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டெர்லைட் மூடப்பட்டது - தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையல் நீர், நிலம், காற்று என மூன்றும் மாசுபடுகிறது - தமிழக அரசு

ஸ்டெர்லைட் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது என உச்சநீதிமன்றம் 2010ல் தீர்ப்பளித்துள்ளது - தமிழக அரசு

2010ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் ரூ.100 கோடி அபராதம் விதித்தது - தமிழக அரசு

ஆலை கழிவுகளில் சல்பைடு, மெக்னீசியம் போன்ற வேதிப் பொருட்களின் அளவு நிர்ணயித்ததை விட அதிகமாக இருந்தது - தமிழக அரசு

ஸ்டெர்லைட் தரப்பு வாதம் என்ன?

சுற்றுச் சூழல் துறையிடம் உரிய அனுமதி பெற்றுள்ள நிலையில் தமிழக அரசு ஆலையை மூடியுள்ளது - ஸ்டெர்லைட்

மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றி ஆலை உரிய முறையில் செயல்பட்டு வந்தது - ஸ்டெர்லைட்

கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஆலையை திறக்க அனுமதித்தாலும் ஏற்கத்தயார் - ஸ்டெர்லைட்

ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடியில் காற்று, நீர் மாசு குறைந்துள்ளதாக கூறுவது தவறு - ஸ்டெர்லைட்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments