அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவு கேட்டு படகுப் பேரணி.. உலக சாதனை படைக்க உள்ளதாக தகவல்..!

0 1265

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு ஆதரவாக நடத்தப்பட்ட படகுப் பேரணி உலக சாதனை படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அங்கு அதிபர் தேர்தலின் ஒரு பகுதியாக ட்ரம்புக்கு ஆதரவு திரட்டும் வகையில் நியூஜெர்ஸி, டெலவர், அலபாமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் படகுப் பேரணி நடத்தினர். புளோரிடாவின் "கிளியர்வாட்டர்" நகருக்கு அருகே பிரமாண்ட படகுப் பேரணி நடத்தப்பட்டது.

இந்தப் பேரணியில் 2000க்கும் அதிகமான படகுகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. மலேசியாவில் கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட படகுப் பேரணியில் ஆயிரத்து 180 படகுகளை விட தற்போது அதிகம் பேர் பங்கேற்றுள்ளதால் மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments