புதுச்சேரியில் ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடைகள் அடைப்பு

0 1503
புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை அங்கு ஏழாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், நாள் ஒன்றிற்கு சராசரியாக 300-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து, கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் நாராயணசாமியின் உத்தரவின்படி, காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் மருந்து கடைகள், பால் நிலையங்களை தவிர பிற கடைகள் செயல்பட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளதால் புதுச்சேரி நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments