ஜே.இ.இ தேர்வு - நுழைவுச்சீட்டு வெளியீடு

0 676

தேசிய அளவில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெற உள்ள ஜே.இ.இ மெயின் தேர்வை நாடு முழுவதும் 1,318 மையங்களில், 8,58,273 பேர் எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, அதனை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா பரவல் காரணமாக முன்னெடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகளுக்கு, தேர்வர்கள் போதிய ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments