இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீனா அறிவிப்பு

0 19580

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மோடியின் அதிரடிப் பேச்சினைத் தொடர்ந்து சீனாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதங்களுடன் மோதியவர்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பதிலடி தரப்பட்டுள்ளதாக மோடி பேசினார். இதில் சீனாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவர் பேசினாலும், சீனாவுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால் என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், இந்தியாவும், சீனாவும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள் என்று கூறியுள்ள அவர், இரு தரப்பினருக்கும் சரியான பாதை, ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதும் ஆதரிப்பதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு உறவுகளின் நீண்டகால வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றும் லிஜியன் தெரிவித்துள்ளார்.

எனவே மோடி சுதந்திர தினத்தில் பேசியது முக்கியமல்ல என்று கூறும் அரசியல் நோக்கர்கள் அடுத்து அவர் என்ன செய்வார் என்பதே முக்கியம் எனத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments