17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிகரெட் மூலம் சூடு வைத்த இருவர் கைது

0 4594

உத்தரபிரதேசத்தில் 17 வயது தலித் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிகரெட் மூலம் சூடு வைத்த இருவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோரக்பூர் மாவட்டம் பர்கல்கஞ்ச் (Barhalganj) பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தண்ணீர் எடுப்பதற்காக வெளியே சென்ற நிலையில் வீடுதிரும்பாததால் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.

சனிக்கிழமை காலையில் அருகில் இருந்த பாழடைந்த வீட்டில் சுயநினைவின்றி கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிகரெட்டால் சூடு வைத்தது தெரிய வந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அர்ஜுன் நிஷாத், மகேஷ் யாதவ் ஆகியோர் இருசக்கரவாகனத்தில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments