'தோனி ஓய்வு... அப்போ நானும் ரிட்டையர்டு!'- சிகாகோ பாகிஸ்தான் சாச்சா அறிவிப்பு

0 11850

சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளதால், இனி நானும் கிரிக்கெட் போட்டிகளை காண நேரில் போக மாட்டேன் என்று தோனியின் பாகிஸ்தானை சேர்ந்த தீவிர ரசிகர் முகமது பஷீர் சாச்சா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த முகமது பஷீர் சிகாகோவில் வசித்து வருகிறார். அங்கு, உணவகம் நடத்துகிறார். இவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தீவிர ரசிகர். உலகமெங்கும் எந்த நாட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தாலும் அங்கு முகமது பஷீர் ஆஜராகி விடுவார். ஆனால், பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்ய மாட்டார். மாறாக, தோனிக்கு ஆதரவாக கோஷமிடுவார்.

இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் முகமது பஷீரை, ' சிகாகோ சாச்சா' என்று அழைப்பார்கள். பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சாச்சாவை கண்டாலே எரிச்சல் வந்து விடும். சாச்சாவை சுற்றி வளைத்து கேலி செய்வது அவர்களின் வழக்கம். ஆனாலும், தோனிக்கு கொடுக்கும் ஆதரவை சாச்சாவை கை விட்டதில்லை. இந்த நிலையில், தோனி ஓய்வு அறிவித்தையடுத்து , தானும் இனிமேல் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க பயணம் மேற்கொள்ளப் போவதில்லை சிகாகோ சாச்சா என்று கூறியுள்ளார்.

தற்போது 65 வயதான முகமது பஷீருக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. தோனியின் ஓய்வு குறித்து முகமது பஷீர் கூறுகையில், '' எந்த ஒரு வீரருக்கும் ஒருநாள் முடிவு வந்துதான் தீரும். தோனிக்கு கடைசியாக பிரிவுபச்சாரப் போட்டியுடன் ஓய்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 2018 - ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின் போது, என்னை அறைக்கு அழைத்து சென்று அவரின் ஜெர்சி வழங்கியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது ,எனக்கு டிக்கெட்டுகளை வாங்கி அனுப்புவார்.

2015-ஆம் ஆண்டு சிட்னிக்கு போட்டியை பார்க்க சென்றிருந்தேன். சிட்னி கடற்கரையை சுற்றி பார்க்க சென்றேன்.  கடும் வெயில் அடித்தது. அப்போது என்னை நோக்கி வந்த சுரேஷ் ரெய்னா கூலிங்கிளாஸ் கண்ணாடியை தந்தார். இதை தோனி உங்களிடத்தில் கொடுக்க சொன்னார் என்று ரெய்னா என்னிடத்தில் சொன்னார். போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் தோனி யாரிடமாவது எனக்கு கொடுத்து விடுவார்.

கொரேனா காலம் முடிந்த பிறகு ராஞ்சி சென்று நான் தோனியை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். என் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால், இனி மைதானங்களுக்கு சென்று போட்டியை பார்க்க மாட்டேன். ஒரு முறை பிர்ஹிமிங்காமில் என்னை பாகிஸ்தான் ரசிகர்கள் சுற்றி வளைத்து துரோகி துரோகி என கோஷமிட்டனர். அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. இரு நாடுகளையுமே நான் நேசிக்கிறேன் ''என்றார்.

முகமது பஷீரின் மனைவி தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் நகரைச் சேர்ந்தவர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments