பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் : 2 சிஆர்பிஎப் வீரர்கள், 1 சிறப்பு போலீஸ் படை அதிகாரி வீரமரணம்

0 797
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்களும், சிறப்பு காவல்துறை அதிகாரி ஒருவரும் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் இன்று வீரமரணம் அடைந்த தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாரமுல்லா மாவட்டம் க்ரீரி பகுதியில் (Kreeri area) சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் சிறப்பு போலீசார் கொண்ட கூட்டு பாதுகாப்பு படை மீது 3 பயங்கரவாதிகள் இன்று காலை திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 2 சிஆர்பிஎப் வீரர்களும், சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து கூடுதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினருக்கு சண்டை மூண்டது. இச்சண்டையில் இதுவரை 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த பயங்கரவாதிகள், லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஐ.ஜி. விஜயகுமார் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments