ஊரடங்கில் போராட்டம் நடத்தியதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு

0 2076
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்கு

தளர்வில்லா முழுஊரடங்கு நாளில் போராட்டம் நடத்திய சீமான் உள்ளிட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தின் முன்பு சீமான் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தளர்வில்லா முழுஊரடங்கு, 144 தடையுத்தரவு மீறி, இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சீமான் உள்ளிட்ட 20 பேர் மீது, தடையுத்தரவை மீறி போராட்டம், சட்ட விரோதமாக கூடுவது ஆகிய இரண்டு பிரிவுகளில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments