கமலா ஹாரீசுக்கு வச்சாச்சு பேனர்... சொந்த கிராம மக்கள் உற்சாகம்!

0 7177

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரீஸ் ஒரே நாளில் தமிழகமெங்கும் பிரபலமாகி விட்டார். ஜனநாயக கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸை அறிவித்ததுதான் அதற்கு காரணம்.

மன்னார்குடி மாவட்டம் பைங்காடு துளேசிந்தபுரம் என்ற கிராமம்தான் கமலா ஹாரீஸின் சொந்த ஊர். கமலா ஹாரீஸின் தாத்தா பி.வி. கோபாலன் இந்த ஊரைச் சேர்ந்தவர். இவரின், மகள் ஷியாமளா கோபாலனின் மகள்தான் கமலா ஹாரீஸ்.

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டதும் அவரின் சொந்த ஊர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு, கமலா ஹாரீஸ் வெற்றி பெற பாராட்டி பேனரும் வைத்துள்ளனர். அதில், 'பி.வி. கோபலனின் பேத்தி வெற்றி விட்டடார்' என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.

இந்த பேனரை கமலா ஹாரீஸின் சகோதரி மாயலக்ஷிமியின் மகள் மீனா ஹாரீஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''நான் சிறு வயதில் சென்னைக்கு சென்ற போது எனது பெரிய தாத்தாவுடன் பழகியிருக்கிறேன்.என் பெரிய தாத்தாவும் பாட்டியும் இப்போதும் எங்காவது இருந்து எங்களை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் '' என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 35 வயதான மீனா ஹாரீஸ் குழந்தைகள் எழுத்தாளர் ஆவார். 'Phenomenal Woman Action Campaign' என்ற அமைப்பையும் தொடங்கி , பெண்கள் நலனுக்காக போராடி வருகிறார். மீனா ஹாரீஸின் தந்தையின் பெயர் டோனி வெஸ்ட்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments