மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 11,111 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

0 742

இந்தியாவிலேயே மிக அதிகமாக மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மகாராஷ்ட்ராவில் 11 ஆயிரத்து 111 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரம் பேர் மும்பை நகரத்தை சேர்ந்தவர்கள். மும்பையில் மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

மும்பையில் நேற்று 47 பேர் உயிரிழந்ததையடுத்து மகாராஷ்ட்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 288 என்று உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், ஊரடங்கை சூழலுக்கு தக்கவாறு படிப்படியாக தளர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments