பாக்.- இங்கிலாந்து 2-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு

0 1004

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.

சவுத்தாம்டனில் நடைபெற்று வரும் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை 236 ரன்களுக்கு இழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த நிலையில், தொடர்ந்து மழை நீடித்ததால், மீண்டும் ஆட்டம் தொடங்கவே இல்லை. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இன்று ஒருநாள் மட்டுமே மீதமுள்ளதால், ஆட்டம் டிராவில் முடியவே வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments