1, 6, 9 வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்

0 1847
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று நடைபெறுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று நடைபெறுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கமாக கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், ஆகஸ்ட் 17ந்தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதன்படி 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதற்கான பிற வகுப்பு மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்குகிறது. பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவற்றை தவறாமல் பின்பற்றவேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிநபர் இடைவெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சில சான்றிதழ்கள் இல்லை என்றாலும், முதலில் மாணவரை சேர்த்துவிட்டு, பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments