சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு..!

0 4174
சென்னையில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் வரும் செவ்வாய்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் வரும் செவ்வாய்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகள் வரும் 18ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளதாகவும், ஆனால் மால்கள் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் இயங்கும் என்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றி வந்து மது வாங்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு ஒரு மதுக்கடைக்கு, 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் அதனை ஒட்டியுள்ள பார்களைத் திறக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments