தந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் - எஸ்.பி.பி சரண்

0 6086

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்பை விட முன்னேற்றம் காணப்படுவதாகவும் நிச்சயம் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் மருதுவர்களைப் பார்த்து தனது தந்தை பெருவிரலை உயர்த்தி சைகை செய்ததாகவும் முன்பிருந்ததை விட சுவாசிப்பதில் தற்போது சிரமம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனது தாயும் குணமடைந்து வருவதாகவும் ஓரிரு தினங்களில் அவர் மருத்துமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் எஸ்.பி.பி.சரண் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments