கோயில் வளாகத்தில் மது மற்றும் மாமிசம் சாப்பிட்ட 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

0 11028

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கோயில் வளாகத்தில் மது மற்றும் மாமிசம் சாப்பிட்ட ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மணவாளநல்லூர் கிராமத்தில் உள்ள கொளஞ்சியப்பர் கோயில், கொரோனா ஊரடங்கால் 4 மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து மது மற்றும் மாமிசம் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பொறுப்பு மேலாளர் சிவராஜன் மற்றும் காவலர் சிவக்குமார் இருவரையும் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் பணியிடை நீக்கம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments