ரஷ்ய வான் பகுதியில், அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானம் விரட்டியடிப்பு

0 1979

தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானம், வெளியேற்றப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஷ்ய எல்லைக்கு உட்பட்ட கருங்கடலில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ЕР-3Е Aries என்ற உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 780 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அந்த விமானத்தை, ரஷ்யாவின் SU-27 ரக ஜெட் விமானம் வழிமறித்து, ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை அதனை பின் தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments