உ.பி.யில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை

0 1368

உத்தர பிரதேத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹாபூர் எனுமிடத்தில் கடந்த வாரம் 6 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு தணிவதற்குள், நேபாள எல்லையையொட்டிய லகிம்பூர்கேரி (Lakhimpur Kheri) மாவட்டத்தில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

2 கண்களும் தோண்டப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டிருந்ததாக சிறுமியின் தந்தை தெரிவித்திருந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், அதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை. இதை காவல்துறையினரும் மறுத்துள்ளனர். இச்சம்பவத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்ட கரும்பு தோட்ட உரிமையாளர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments