மெக்சிகோவுக்கு 20 கோடி முறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து தேவை... வெளியுறவு இணையமைச்சர் தகவல்

0 1245
மெக்சிகோவுக்கு 20 கோடி முறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து தேவை

மெக்சிகோவுக்கு 20 கோடி முறை செலுத்தும் அளவு கொரோனா தடுப்பு மருந்து தேவைப்படுவதாகவும், தடுப்பூசி போடும் பணி ஏப்ரலில் தொடங்கும் என்றும் அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா செனேக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு 40 கோடி முறை செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்து வழங்க மெக்சிகோ, அர்ஜென்டினா நாடுகளுடன் உடன்பாடு செய்துள்ளது.

முதற்கட்டமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 15 கோடி முறை செலுத்துவதற்கான மருந்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் மெக்சிகோவுக்கு மட்டும் 20 கோடி முறை செலுத்தும் மருந்து தேவைப்படுவதாக அந்நாட்டின் வெளியுறவு இணையமைச்சர் மார்த்தா டெல்கடோ தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ரா செனேக்காவின் சோதனை திட்டமிட்டபடி வெற்றியடைந்தால், 12 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணி ஏப்ரலில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments