பொறியியல் - தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

0 3962
மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள  பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு தவிர்த்து பிற மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில்  இளநிலை படிப்புகளில் முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மற்றும் முதுநிலை படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஏப்ரல் - மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் அண்ணாபல்கலைகழகத்தின் https://www.annauniv.edu/ என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments