அமெரிக்க அதிபர் டிரம்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப் மரணம்

0 4199
அமெரிக்க அதிபர் டிரம்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப் மரணம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப்  உடல்நலக்குறைவால் காலமானார்.

71 வயதான அவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனைக்கு சென்று சகோதரரின் உடல்நிலை குறித்து  மருத்துவர்களிடம் அதிபர் டிரம்ப் கேட்டறிந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராபர்ட் டிரம்ப் காலமானார். அவர் தனது சகோதரர் மட்டுமல்ல நல்ல நண்பர் என்று இரங்கல் செய்தியில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ராபர்ட் டிரம்ப் என்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்  என தெரிவிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments