திரையில் தோன்றியதன் 45 வது ஆண்டு நிறைவையொட்டி குடும்பத்தினருடன் கொண்டாடிய ரஜினி

0 29031
திரையில் தோன்றியதன் 45 வது ஆண்டு நிறைவையொட்டி குடும்பத்தினருடன் கொண்டாடிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவை ஒட்டி தமது குடும்பத்தினருடன் சென்னையில் கொண்டாடி மகிழ்ந்தார்.

1975ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கி கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அபூர்வ ராகங்களில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் முதன் முதலாகத் திரையில் தோன்றினார்.

அதன் பின்னர் கமலுடன் மூன்று முடிச்சு, ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் அவர் வில்லனாக நடித்தார்.167 படங்களை 45 ஆண்டுகளில் நடித்துள்ள ரஜினிகாந்த் தமது திரையுலகப் பயணத்தில் யாரும் அடையாத உச்சத்தை அடைந்துள்ளார்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகளில் ரஜினி வெள்ளை ஆடையில் தேசியக் கொடியை அணிந்து காட்சியளிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments