சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும் - முதலமைச்சர்

0 1737
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று காலை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றிவைத்து, வணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எழுநூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்திக்கடவு - அவினாசி திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 16 ஆயிரம் ரூபாயில் இருந்து 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

கொரோனா காலத்தில் மட்டும், இதுவரை 41 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கையெழுத்தாகியுள்ளதாகி இருப்பதாக முதலமைச்சர் கூறினார். இதன் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி முதலீடும், 67 ஆயிரத்து 212 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments