கமலா ஹாரிசை காட்டிலும் எனக்கு அதிக இந்தியர்களின் ஆதரவு - ட்ரம்ப்

0 6969
ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை காட்டிலும் தனக்கு அதிக இந்தியர்களின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை காட்டிலும் தனக்கு அதிக இந்தியர்களின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூஜெர்சியிலுள்ள பெட்மின்ஸ்டர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்காவின் அனைத்து காவல் துறைகளையும் நெருக்கும் வகையிலான சட்டத்தை இயற்றுவார் என்றும், கமலா ஹாரிஸ் அவரை விட மோசமானவர் என்றும் கூறினார்.

மேலும் செனட்டர் எலிசபெத் வாரனை போகாஹோண்டஸ் எனக் குறிப்பிட்டு அவரை பிடன் துணை அதிபர் வேட்பாளாராக தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமென தாம் விரும்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராயினும் அவரை காட்டிலும் தனக்கு அதிகளவிலான இந்தியர்களின் ஆதரவு இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments