பதினெட்டு வயது குதிராம்போஸ் ... ஒரு மறக்க முடியாத சரித்திரம்!

0 4484

நாட்டுக்காக போராடி உயிர்நீத்தவர்களில் பலர் உண்டு. அதில், முக்கியமானவர் குதிராம் போஸ். சுதந்திரத்துக்காக போராடி இவர் தூக்கு மேடை ஏறிய போது, 18 ஆண்டுகள் 7 மாதங்களும் 11 நாள்களுமே ஆகியிருந்தன. ஆனால், அந்த சிறு வயதில் ஆங்கிலேயர்கள் சிம்ம சொப்பனமாக இருந்தார் குதிராம் போஸ்.பிரிக்கப்படாத வங்காளத்தில் மிதினாப்பூர் மாவட்டம் ஹபிப்பூர் என்ற கிராமத்தில் கடந்த 1889- ஆம் ஆண்டு பிறந்த குதிராம் போஸ் ஆன்மீகவாதியான அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆற்றிய சொற்பொழிவுகளை கேட்டு வளர்ந்தவர். இதனால், இயல்பாகவே நாட்டுப்பற்றும் பக்தியும் அவரிடம் குடி கொண்டிருந்தது.

1904 - ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த போது, சத்தியேந்திரநாத் உள்ளிட்ட பல புரட்சியாளர்களின் நட்பும் தொடர்பும் குதிராம் போசுக்கு கிடைக்தது. மக்களின் நல்வாழ்வுக்காக போராடும் அனுசீலன் சமிதி என்ற இயக்கத்தில் சேர்ந்து காலரா, மலேரியா பாதிக்கப்பட்டவர்களுக்கு  சேவை செய்து வந்தார் குதிராம் போஸ்.  1905- ஆம் ஆண்டு வங்க பிரிவினை ஏற்பட்ட போது, பெரும் போராட்டம் வெடித்தது. குதிராம் போஸ் தலைமையிலான குழு போலீஸ் நிலையங்களை தாக்கியது. ஆங்கிலேயே அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.image

சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் தேச பக்தர்களுக்கு கொடூரமான தண்டனைகளை அலிபூர் நீதிமன்ற வெள்ளைய நீதிபதி கிங்ஸ்போர்டு வழங்கி வந்தார். இந்த நீதிபதியின் கொடூரத்துக்கு உதாரணமாக ஒரு விஷயம் சொல்லலாம். பிபின் சந்திரபால் என்ற சுதந்திர போராட்ட வீரர் அலிபூர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அப்போது 1 4 வயது சிறுவன் ‘வந்தேமாதரம்’ என்று கோஷமிட்டு விட்டான். அந்தச் சிறுவனை மயங்கிவிழும் வரை சவுக்கால் அடிக்கச் கிங்ஸ்போர்டு உத்தரவிட்டார்.  சிறுவன் தன் மீது கசையடி விழும்போதெல்லாம் வந்தே மாதரம் என்று கோஷமிட்டுத் தன் வலியை குறைத்துக் கொண்டான். இது போன்ற சம்பவங்களால் பொது மக்கள் நீதிபதி கிங்ஸ்போர்டு  மீது கடுங்கோபத்தில் இருந்தனர். பொதுமக்களை பற்றிக் கவலைப்படாமல் ஆங்கிலேயே அரசு, கிங்ஸ்போர்டுக்குப் பதவி உயர்வு வழங்கி முஷாஃபர்பூருக்கு மாற்றியது. இது புரட்சி இயக்கத்தினருக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த ஆத்திரமூட்டியது.

எனவே, அனுசீலன் சமீதி நீதிபதி கிங்ஸ்போர்டை கொல்ல ஆலேசனை கூட்டம் நடத்தியது. அனுசீலன் சமிதியின் தலைவராக இருந்த சத்யன் பாசு, நீதிபதி கிங்ஸ்போர்டை கொல்லும் பொறுப்பை குதிராம் போஸ், பிரபுல்லா சாகியிடம் ஒப்படைத்தார். குதிராம்போஸ், சாகி இருவரும் முஷாஃபர்பூர் சென்று நீதிபதி வசித்த பங்களா அருகே உள்ள தர்மசத்திரத்தில் தங்கினர். நீதிபதியின் நடவடிக்கையை கண்காணித்தனர். நீதிபதி கிங்ஸ்போர்டுக்கு சீட்டாடும் பழக்கம் இருந்தது. பங்களா அருகேவுள்ள வெள்ளையர் கிளப்புக்கு சென்று சீட்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். image

1908 - ஆம் ஆண்டு ஏப்ரல் 29 - ஆம் தேதி இரவு பிரிட்டிஷ் எழுத்தாளர் பிரிங்ளே கென்னடி என்பவரின் மனைவியுடன் அந்த கிளப்பில் கிங்ஸ்போர்டு  சீட்டாடிக் கொண்டிருந்தார். உடன் பிரிங்ளேவின் மகளும் இருந்தார். ஆட்டத்தை முடித்து கிளப்பை விட்டு வெளியே வந்த மூன்று பேரும் சாராட்டில் ஏறி வீட்டுக்கு கிளம்பினர். முதலில் வந்த சாராட்டில் பிரிங்ளேவின் மனைவியும் மகளும் இருந்தன. அடுத்த வண்டியில் கிங்ஸ்போர்டு இருந்தார். குதிராம் போசும் , சாகியும் குண்டுகளை வீச, அது தவறி பிரிங்ளே கென்னடியின் மனைவி மகள் இருந்த வண்டியின் மீது விழுந்து வெடித்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார்கள். கிங்ஸ்போர்டு உயிர் தப்பி விட்டார்.

தாக்குதலை நடத்திய பிறகு நண்பர்கள் இருவரும் பிரிந்தனர். போலீஸ் பிடிக்க முயன்ற போது , சாகி துப்பாக்கியால் நெஞ்சை நோக்கி குறி வைத்து சுட்டு வீர மரணமடைந்தார். ஏப்ரல் 30- ஆம் தேதி வைனி  என்ற இடத்தில் குதிராம் போஸ் பிடிபட்டார். அவரிடத்திலிருந்து ரூ. 30 மற்றும் 37 கிராம் வெடி மருந்தை போலீஸ் கைப்பற்றியது. விசாரணைக்கு பிறகு, குதிராம் போசுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 1908 - ஆம்  ஆண்டு ஆகஸ்ட் 11- ஆம் தேதி குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார். இந்தியாவிலேயே சுதந்திரத்துக்காக போராடி இளம் வயதில் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட வீரன் குதிராம் போஸ்தான்.

வங்காள மொழி பத்திரிகையான 'அமிர்தா பஜார்' , பிரிட்டிஷார் நடத்திய  'தி எம்பயர்' போன்ற பல செய்தித்தாள்கள் , குதிராம் போஸ் தூக்கு கயிற்றை முத்திமிட்ட போது கூட சிரித்துக் கொண்டே இருந்ததாக செய்திகள் வெளியிட்டன.

எத்தகைய மாவீரர்கள் வாழ்ந்த மண் இது!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments