அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 1182
ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட8 மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை மற்றும் புறநகரில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படும் நிலையில் ஒருசில இடங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி  செல்சியஸ் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை தென்மேற்கு  மற்றும் மத்திய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments