பார்சிலோனாவுக்கு 74 ஆண்டுகளில் இப்படி ஒரு தோல்வி: 8 கோல்கள் அடித்து அதகளம் செய்த பேயர்ன்!

0 5678

லிஸ்பனில் நடந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதி ஆட்டத்தில் 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி பேயர்ன் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆட்டம் தொடங்கிய 7 - வது நிமிடத்தில் பார்சிலோனா முன்கள வீரர் தாமஸ் முல்லர் பேயர்ன் மியூனிச் அணிக்கான முதல் கோல் அடித்து முன்னணி தேடி கொடுத்தார். முதல் பாதியில் 31 வது நிமிடங்களுக்கு பேயர்ன் 4 கோல்கள் அடிக்க , பார்சிலோனாவால் ஒரு கோல்தான் அடிக்க முடிந்தது. பிற்பாதியிலும் பேயர்ன் 4 கோல்களும், பார்சிலோனாவால் ஒரு கோலும்தான் அடிக்க முடிந்தது. இறுதியில் பேயர்ன் மியூனிச் 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதற்கு முன்னதாக 1946- ஆம் ஆண்டு, பார்சிலோனா அணி செவிலா அணியிடம் 8 கோல்கள் வாங்கி தோற்றிருந்தது. தற்போது, 74 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் 8 கோல்கள் வாங்கி பார்சிலோனா தோற்றிருப்பது இதுவே முதன்முறை . 1976 -ஆம் ஆண்டுக்கு பிறகு பார்சிலோனா அணிக்கு எதிராக 5 கோல்களுக்கு மேல் அடிக்கப்பட்டதும் இப்போதுதான். அப்போது, நெவ்ஸ்கி சோஃபியா அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கடந்த 1949 - ஆம் ஆண்டு வாலன்ஸியா அணி 7 கோல்கள் அடித்து பார்சிலோனாவை தேற்கடித்தது. அதற்கு பிறகு, இப்போதுதான் 7 கோல்களுக்கு மேல் பார்சிலோனா வாங்கியுள்ளது. கடந்த 2013- ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இரண்டு லெக் ஆட்டங்களிலும் சேர்ந்து 7-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியதே பேயர்னின் சிறந்த வெற்றியாக இருந்தது.

பேயர்ன்மியூனிச் , பார்சிலோனா இரு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments