மத்திய அரசுக்கு ரூ.57,128 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

0 1641
மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக 57 ஆயிரத்து 128 கோடி ரூபாய் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக 57 ஆயிரத்து 128 கோடி ரூபாய் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மத்திய அரசின் வரி வருவாய் கணிசமாக குறைந்துள்ளதுடன், செலவினமும் அதிகரித்துள்ளது. 

இதனால் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை இதுவரை இல்லாத விதமாக 6 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதி, வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments