கொரோனாவிலிருந்து குணமானார் அமித் ஷா..!

0 986
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அத்தொற்றிலிருந்து குணமாகியுள்ளார்.

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அத்தொற்றிலிருந்து குணமாகியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்த 2ம் தேதி கொரோனா உறுதியானது. இதையடுத்து குர்காணில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இன்று இந்தியில் வெளியிட்ட பதிவில் பரிசோதனையில் தமக்கு நெகட்டிவ் என வந்திருப்பதாகவும், இருப்பினும் மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் சில நாள்கள் வீட்டில் இருக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாம் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் பதிவில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும், கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது மனஉறுதி, தீர்மானம் ஆகியவையே விரைந்து குணமாக உதவியாக இருந்தன எனவும் அந்த மருத்துவமனை கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments