தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் வீரமரணம்

0 1310
ஜம்மு காஷ்மீரின் நவுகாம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் வீரமரணமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் நவுகாம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் வீரமரணமடைந்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா என்ற இடத்தில் நேற்று ராணுவ வீரர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீவிரவாதிகளின் 3 முகாம்களை தகர்த்தனர். இதற்கு பழித்தீர்க்கும் விதமாக நவுகாமில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள காவல்துறை முகாம்களை குறிவைத்து தீவிரவாதிகள் மறைந்து இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 போலீசார் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பகுதி முழுவதும் சுற்றுவளைக்கப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தி உள்ளதாகவும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments