திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க முதலமைச்சருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

0 1059

தமிழகத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா, முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்தாகி, 150 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் இது போன்ற நிலையை தமிழ் சினிமா இதுவரை சந்தித்தில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் என அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு சின்னத்திரை படபிடிப்புக்கு அனுமதி அளித்தது போன்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அனுமதியை திரைப்பட படபிடிப்புக்கும் வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments